நீ
கட்டிக்கொள்ள விழைந்த நேரங்களில்
தட்டிக் கழித்து சென்றவள்
உன்னோடு
இணைய விழைகளில்
எட்டிச் செல்வதென்ன
நண்பனே..
பிழையானது
நான் இணைய விழைந்த நேரமா?
அன்று தட்டிக் கழித்த நானா?
விடையின்றி தவிக்கிறேன்
நீ
என்னை விழைந்த
பொழுதுகளின் நினைவிலும்..
நீ
என்னை சேரும்
பொழுதின் எதிர்ப்பார்ப்பிலும் ..
No comments:
Post a Comment