Monday, April 29, 2013
Friday, April 26, 2013
தோன்றாத் துணை
தன் நலத்தை விட
என் நலமே பெரிதாய்
கவலைகள் தன்னை வாட்டும் போதும்
என் மகிழ்ச்சியே முக்கியமாய்..
என் அனைத்து செயல்களிலும்
தோள் கொடுக்கும் துணையாய்..
நானிருக்கிறேன் என்று
எனக்கு பாதுக்காப்பாய்..
திட்டினாலும்
என் நன்மைக்காய்..
என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய்..
என் பயங்களை
ஒழிப்பவராய்..
பின்னிருந்து
ஆதரவளிக்கும் சக்தியாய்..
எத்தனை வயதானாலும்
என்னை கைப்பிடித்து நடத்தும் வழிக்காட்டியாய்..
என்றும் என்னோடு இருக்கும்
தோன்றாத் துணை
மறு வார்த்தையில்
அப்பா.....
Thursday, April 25, 2013
காயம்
வலிக்கின்றது
ஒவ்வொரு முறையும்
நீ
என்னை காயப்படுத்துகையில்
சிறு விஷயங்கள்
மிக பெரிதாக
பேசும் வார்த்தைகள்
முள் தைக்க
ஏனோ மறந்து விடுகிறாய்
காயப்படுத்துவது
என்னை மட்டுமல்ல
உன்னையும் இணைத்தே என்பதை...
மெளனமாக காத்திருக்கிறேன்
வலியோடு....
என் மீதான அன்பு
உன் கோபத்தை மறைக்கும்
நிமிடத்தை எதிர்பார்த்து........
Wednesday, April 24, 2013
எச்சரிக்கை
காணி
நிலமும்
தோட்டத்தில் கிணறும்
அருகே தென்னை மரமும்
கேட்ட பாரதி
நல்ல வேளையாக அறியவில்லை
இன்றைய நிலையை
முப்பது மாடி கட்டடங்களும்
வான் உயர நிற்கின்றன
ஆயினும்
நீர் ஏற்றப்படுகிறது
தண்ணீர் வண்டிகளில்
நிலத்தடி நீரின் அளவு
செல்கிறது
ஒவ்வொரு வருடமும்
ஆழமாக
இது
மனிதர்களுக்கு
பூமி தரும் எச்சரிக்கை போல
இன்னும் சில நூற்றாண்டுகளில்
உன் தலைமுறையும்
இந்த ஆழத்திற்கே
செல்லும் என்று....
Tuesday, April 23, 2013
Monday, April 22, 2013
மதம்
எம்மதமும் ஒன்றாம்
ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் பலர்
கூட்டிக் கழித்து பார்த்தால்
அனைத்து மதங்களும்
அனைத்து போதனைகளும்
அனைத்து அவதாரங்களும்
நம் தமிழ் படங்களை போல
ஒரே கதை தான்
சிலுவையில் அறையப்பட்டவரும்
கல்லால் அடிக்கப்பட்டவரும்
சொந்த நாட்டை விட்டு
துரத்தப்பட்டவரும்
இறுதியில்
விட்டுச்சென்ற போதனை எல்லாம்
அன்பும் அமைதியும் தான்!!!!
தன் மதமே பெரிதென
மொழிந்து பலர்
வாழ்வின் முக்கியமானதான
மதங்கள் போற்றும்
அன்பை தொலைகின்றனர்....
Sunday, April 21, 2013
ஏமாற்றம்
தினமும்
உன்னை எதிர்ப்பார்த்து
ஏமாறுகிறேன்
ஆயினும்
நீ
வருவதெல்லாம்
கனவில் மட்டுமே
பிடித்துக்கொள்ள நினைக்கிறேன்
உன் கரங்களை
கனவில்லாவது
என்னை சுற்றிடும்
அனைத்து செயல்களும்
உன்னையே நிறுத்துகின்றது
என் நினைவின் முன்னே
நீ கொடுத்த
பொம்மைகளும்
நிறைக்கவில்லை
உன் இடத்தை
அத்தனை தூரத்தில் இருந்தும்
என்னை
பாதிக்க முடிகிறது
உன்னால் மட்டும்......
ஏமாற்றாதே
இனியும்....
என் மனம்
தவிக்கின்றது
தவிக்கின்றது
உன் பிரிவால்.....
Wednesday, April 17, 2013
சொந்த ஊர்
ஊருக்குள் நுழையும் போதே
பற்றிக்கொள்ளும்
உற்சாகம்
ரயிலின் ஜன்னல் வழியே தெரியும்
பழக்கமான பாலங்களும்
கோவில்களும்
நினைவுப்படுத்தும் பழைய நினைவுகளை
விடிகாலை விளக்கோடு சாலைகளும்
வறண்டிருப்பினும் அழகோடு தெரியும் ஆறும்
ரயில் தண்டவாளத்தை அடையும் முன்பே
எட்டித்தெரியும் ரயில் நிலையமும்
முழுதடைய செய்கிறது
மனதை
பெரிய நகரங்களில்
எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும்
அடைய முடிவதில்லை
சொந்த ஊரின்
ஸ்பரிசம் தரும்
சந்தோஷத்தை....
தனிமை
தனக்கென
அலங்கரிக்கப்பட்ட பெரிய அறை
அழகான வைர நகைகள்
ஆடும் ஓடும்
மொம்மைகள்
பெரிய புது வகை தொலைக்காட்சி
அதில் ஓடும் சின்ரெல்லா கதை
வேளையாட்களின்
பொறுப்பில்
வளரும்
சிறுமிக்கு!!!
விலையுயர்ந்த
ஆடைகள்
விதவிதமான
அதிநவீன
கணினி விளையாட்டுகள்
அனைத்து வகை சாக்லெட்கள்
நினைத்தவுடன்
கிடைக்கும் பொருட்கள்
எதுவும்
மகிழ்விக்கவில்லை
அவ்வப்போது
எட்டிப்ப்பார்க்கும் பெற்றோருடன்
Tuesday, April 16, 2013
நிறங்கள்
கிளியின் மூக்கு நிறத்தில்
சிகப்பு உடை
சிகப்பு உடை
அதில்
பொடி பொடியாக
எழுமிச்சை பழத்தின் நிறத்தில்
மஞ்சள் நிற புள்ளிகள்
வீட்டின் சுண்ணாம்பு
ஆரஞ்சு பழ நிறத்தில்
மாட்டின் கொம்புகளில்
வானின் நீலமும் கடல் பச்சையும்
என
தன் நண்பனின்
வர்ணனையை
இதழில்
சிறு புன்னகையுடன்
கேட்கிறான்
இரவின் நிறத்தை மட்டுமே
வாழ்வில் அறிந்த
பார்வையற்ற சிறுவன்...
தானே சிருஷ்டித்துக்கொண்ட
நிறங்களை
கற்பனையில் கண்டு.......
Monday, April 15, 2013
தோல்வி
உன் பார்வைக்கும்
என் பார்வைக்கும்
சண்டை
என் பார்வைக்கும்
சண்டை
தோற்கடிக்கிறாய் என்னை
உன் அன்பினில்..
பிரியமில்லை எனக்கு
ஒரே நாளில் தோற்று விட
ஏனெனில்
என் எண்ணம் எல்லாம்
எப்பொழுதும்
உன்னிடம் தோற்பதே ...
உணர்கிறேன்
தோற்பதும் சுகமானதென
உன்னால் !!!!!
ஆகையினால்
தோற்கடித்துக் கொண்டே இரு என்னை
என் வாழ்வின் கடைசி நாள் வரை........
Subscribe to:
Posts (Atom)
















