எட்டிப்
பிடிக்கிறேன்
கைக்கெட்டாத
நிலவை..
முகர்ந்து
பார்க்கிறேன்
காகித
பூவை..
பேசுகிறேன்
அசையாப்
பொருட்களோடு...
பைத்தியமென
நினைக்க வேண்டாம் !!!
ஏமாற்றும்
சூழ்நிலையில்
எவரையும்
நம்ப இயலாத இந்நாளில்
தனிமையின் பாதுக்காப்பான துணை
அஃறினையான
பேசாத
பொருட்களும்
எட்டாத
நிலவும் மட்டுமே .... !!!
No comments:
Post a Comment