செல்ல
சண்டையிடுகிறாய்
உன்னை
மறந்து விட்டேன் என்று
சிணுங்கும்
உன் முகம் கண்டு
சிறு
புன்னகையுடன்
எண்ணுகிறேன்
மறந்தாலும்
என்னை
உன்னிடம் மறப்பேனன்றி
உன்னை
அல்ல என்று .....
காரணம்
தெரியாவிடினும்
என்
புன்னைகை கண்டு
விரிகிறது
உன் முகம்
எனக்கே
எனக்கான
குறும்பு
முறுவலுடன் !!!!!
No comments:
Post a Comment