மழைக்
கால மாலை பொழுதொன்று
கழிந்தது
சுகமாக
உன்னோடு ....
காரிருள்
மேகங்களாய்
சூழ்ந்திடும்
உன்
எண்ணங்கள்....
சில்லென்ற
தூறல்களாய்
சிலிர்ப்பூட்டும்
உன்
அருகாமை....
மின்னலின்
ஒளிக்கு போட்டியாய்
கள்ளத்தனம்
கூத்தாடும்
உன்
பார்வை....
இடியின்
முழக்கத்தின் மீறலாய்
பிரதானமான
உன்
சிரிப்பு சத்தம்....
புன்னகை
நெருக்கமாக
உன்
தோள் வளைவில்
என்
முகம் பதிய
நம் ஒரு
குடைக்குள்
மழைச்
சாரல்.....
இனியதொரு
மழைக்காலம்
நினைக்கவும்
இனிக்கவும்
நமக்கே
நமக்கான
ஒரு
செல்ல மாலை பொழுதாய்......

nice aatempt. I gotta know about this from enpoems.blogspot.com. These poetries have some sort a grace. I dont have any email to contact you and personally say this. Great job... keep writing. Please allow blog followers so that you can get more viewer and feedback can lead you to win more readers and increase your payload to write more.......... :))))))))
ReplyDeletethanks Sanenthan :)
Delete