Friday, March 15, 2013

ஒரு மாலை பேருந்து பயணம்








பயண களைப்பில்
ஜன்னலோர இருக்கை கிடைத்த மனிதரின்
முகத்தில் மலரும் புன்னகை..


எதிர் இருக்கையில் சிரிக்கும் குழந்தை..


எதையோ சிந்தித்து கொண்டிருக்கும் சில மனிதர்கள்..


காதில் இருக்கும் கேட்பொறி
ஒலிக்கும் இசைகேற்ப
முணுமுணுத்து கொன்டிருக்கும் சிலர்..


வேலை முடிந்து வீடு திரும்பும் மகளிர்
ஆலோசிக்கும்
அடுத்த வேளை சமையல்..


பள்ளி கலாட்டகளையும் பட்ட பெயர்களையும்
சிரிப்புடன் பேசும்
பள்ளி மாணவர்கள்...


எங்கேயோ தனியே போகும்
மிக வயதான
தள்ளாடும்
தாத்தாக்கள் பாட்டிகள்..


கூட்டத்திலும்
நிற்க இடமில்லா விடினும்
அலை பேசியில்
சிரிப்புடன் பேசும் அன்பாளர்கள்..


சத்தம் எதையும் காதில் வாங்காமல் 
புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் சிலர்..


இப்படியாக........


ஒரு மாலை பேருந்து பயணம்

நமக்கு காட்டுகின்றது 
பல தர பட்ட மனிதர்களையும் அனுபவத்தையும்



No comments:

Post a Comment