Monday, March 25, 2013

இலையுதிர் காலம்




ஆரம்பமாகி விட்டது

இலையுதிர் காலம்



சின்ன துளிர்களாக தோன்றி

மரத்தின் ஆதரவில் மகிழ்ச்சியோடு ஒன்றி





அதன் ஊட்டச்சத்தின் ஒரு பங்கை உறிஞ்சிக்கொண்டு



ஒவ்வொரு நாளும் செழித்து வளர்ந்து

கொண்டாடிய காலம் முடிந்தது...



சீராட்டிய மரத்தின் பந்தம்

அறுந்தது 

ஒரு நொடியில்






முதியோர் இல்லத்தில்
விட்டு சென்ற மகனின்
சொந்தத்தை போலவே..........





No comments:

Post a Comment