Wednesday, March 20, 2013

சிறு வயது ஞாபகம்


தெரியவில்லை
இன்னும் எத்தனை காலங்கள் 
வாழ்வோம் என்று

ஆனால் 
நினைவில் என்றும் தங்குகிறது

பள்ளி நண்பர்களும்
விளையாடிய விளையாட்டுக்களும்






வகுப்பில் புரிந்த குறும்பு செயல்களும்
கட்டுபடுத்திய தூக்கமும்
வாங்கிய திட்டுக்களும்




ஒவ்வொரு தேர்விற்கும் பயந்ததும்
இரவு நேர படிப்பும்

தேர்வு கடைசி நாளின் விடுமுறை எதிர்ப்பார்ப்பும்
பள்ளி திறக்கும் நாளின் காலை புலம்பலும்

கூப்பிட்டு கொண்ட பட்ட பெயர்களும்
ஓவ்வொரு நண்பருக்கும் இருக்கும் விசேஷ சம்பவங்களும்

பிடித்த ஆசிரியர்களும் நாம் திட்டிய ஆசிரியர்களும்

பண்டிகைக்கு பத்து நாள் முந்திய உற்சாகமும்
தீபாவளி புத்தாடையும் பட்டாசு கொண்டாட்டங்களும்...

பள்ளி கலை நிகழ்ச்சிகளும்
கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகளும்

இப்படி
நாம் அறியாமல் சேர்க்க பட்டுள்ளது
சிறு வயது ஞாபகங்கள்
நம் மனதில் பொக்கிஷமாக.....

2 comments:

  1. ungal padhipil ulla nilalpadangal anaithum arpudham....

    ReplyDelete
  2. நன்றி ஜெகதீஷ்

    ReplyDelete