Wednesday, March 27, 2013

வன்முறை


ஊரெங்கும் கேட்கின்றது
மனிதாபிமானத்தின் குரல்


ஓங்குகின்றன
நியாயத்தை தேடி
உரிமையை தேடி
போராட்டங்கள்


நிகழ்கின்றன 
பொது சாலைகளில்
கடற்கரையில்
ரயில் தண்டவாளங்களில்
கண்டனங்கள்


ஆயினும்

எதையும் பொருட்டாக மதியாது

தொடர்கின்றது


மனிதாபிமானத்தை தொலைத்த
ஆனால் மனித உருவில் இருக்கும்
கொடுமையளர்களின்


ஐந்தறிவு உயிர்களிடத்தினும் 
கீழானவர்களின்
ஒழிக்க முடியாத வன்முறை


உலகம் அழியப்போவதில்லை இயற்கையால்


ஆனால்
அழிக்கப்படத்தான் போகிறது
இத்தகைய வன்முறையாளர்களால்......




No comments:

Post a Comment