Monday, April 22, 2013

முழுமை




நமக்குள்ளான உறவு
வரமா
விபத்தா

நான் அறியேன்

ஆயினும்
உன்னோடான
என் ஒவ்வொரு நிமிடமும்

சிறு தீண்டலும்
சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளும்

வெடிக்கும் சண்டைகளும்
தொடரும் இனிய சமாதானங்களும்

புரிதலும்
பகிர்தலும்
ஆறுதலும்
இம்சைகளும்

உன் சிறு அணைப்பும்
முழுமை அடைய செய்கிறது
என் வாழ்வை.....




No comments:

Post a Comment