முற்றத்தோடு கூடிய பெரிய வீடு
நடுவில் துளசி மாடம்
சுற்றிலும் பசுமையான தோட்டம்
அதட்டலோடு அன்பை காட்டும் தாத்தா
எதிர்பார்ப்பில்லாது பாசத்தை பொழியும் பாட்டி
அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்ளும் அத்தையும் மாமியும்
சண்டைகளை கண்டுக்கொள்ளாது தப்பித்துக் கொள்ளும் மாமாக்கள்
வீட்டிற்கு வரும் போதெல்லாம் கொஞ்சி போகும் சித்தி
உடன் விளையாடும் அண்ணாக்கள் அக்காக்கள்
கிண்டலுக்கு ஆளாகும் அத்தை மகன் மாமன் மகள்
சிறு விசேஷத்திற்கும்
துக்கத்திற்கும்
கைக்கொடுக்கும் நண்பர்கள்
இப்படி
அதிசயமாக
இரண்டு நாள் வருகை தந்திருக்கும் தாத்தா
தன் சிறு வயது வாழ்க்கையை
கூறுகையில்
ஏங்காமல் இருக்க இயலவில்லை
தாத்தாவின் உறவுகளையும்
மகிழ்ச்சியான குழந்தை பருவத்தையும்
இரண்டு அறை வீட்டில்
பள்ளி கதைகளை பகிரக் கூட ஆளில்லாது
கணினி விளையாட்டில் கழித்து



No comments:
Post a Comment