Monday, April 1, 2013

அழுகை

பல நேரங்களில்
சோகத்தின் அடையாளமாய்..

சில நேரங்களில் 
காரியத்தை சாதித்துக் கொள்ள கருவியாய்..

தனிமை கொல்லுகையில் ஒரு பிடிமானமாய்..

நினைத்தவை நடக்காத போது வடிகாலாய்..

ஏமாற்றப்பட்ட நேரங்களில் சமாதானமாய்..

மனம் வலிக்கையில் ஆறுதலாய்..

ஏதும் செய்ய முடியாத சந்தர்ப்பங்களில்
ஆக்ரோஷத்தின் வெளிப்பாடாய்..

அன்புக்குரியவர்களின் மேல் உள்ள கோபத்தின் 
மறு உருவாய்..

இப்படி
பல நேரங்களில்
மனதிற்கு மருந்தாய் அமைகிறது

அழுகை......




No comments:

Post a Comment