ஆசைகள் பல
எனக்கும் இருக்கின்றன சில ஆசைகள்
மலை அருகே உள்ள இடத்தில்
ஏதேனும் கொறித்துக் கொண்டு
சில்லென்று காற்று முகத்தில் பட
உற்றவர்களிடம் பேசி மகிழ..
மழை பெய்வதிற்கு முன்
அடிக்கும் மழைக்காற்றை
மண் வாசனையோடு
மொட்டை மாடியில் நின்று அனுபவிக்க..
புட்கள் நிறைந்த பசுமையான இடத்தினில்
அமைதியை அனுபவித்துக் கொண்டு புத்தகம் படிக்க..
மக்கள் கூட்டமாய்
பரபரப்போடு நடமாடும் ரயில் நிலையங்களில்
அவசரமில்லாது வேடிக்கை பார்க்க....
பரபரப்பான
நகரத்தில் இருந்து ஒதுங்கி
ஏதேனும்
அமைதியான கிராமத்தின்
பசுமையான
வயல்வெளிகளில்
சில
நாட்களை செலவழிக்க....
இத்தகைய சிறிய ஆசைகள்
கற்பனை செய்கையில்
மகிழ்விக்கின்றன
நிறைவேறும் என்ற நிச்சயம் இல்லாவிட்டாலும்........




No comments:
Post a Comment