எனக்கு தெரியாமல்
ஒளித்து மறைத்து
ஏதோ திட்டமிடுகிறாய்
என்னை ஆச்சரியமடைய வைக்க
உன் முகம் பார்த்தே
கண்டுபிடித்து விடுகிறேன்
நீ செய்யும்
கள்ளத்தனத்தை
நான் என்ன கண்ணாடியா
குறுகுறுப்போடு கேட்கிறாய்...
ஆம்
நீ கண்ணாடி தான்...
எனக்கு மட்டுமேயான
உன்னையும் என்னையும் இணைத்து
பிரதிபலிக்கும்
என் கண்ணாடி.!!!!
No comments:
Post a Comment