காணி
நிலமும்
தோட்டத்தில் கிணறும்
அருகே தென்னை மரமும்
கேட்ட பாரதி
நல்ல வேளையாக அறியவில்லை
இன்றைய நிலையை
முப்பது மாடி கட்டடங்களும்
வான் உயர நிற்கின்றன
ஆயினும்
நீர் ஏற்றப்படுகிறது
தண்ணீர் வண்டிகளில்
நிலத்தடி நீரின் அளவு
செல்கிறது
ஒவ்வொரு வருடமும்
ஆழமாக
இது
மனிதர்களுக்கு
பூமி தரும் எச்சரிக்கை போல
இன்னும் சில நூற்றாண்டுகளில்
உன் தலைமுறையும்
இந்த ஆழத்திற்கே
செல்லும் என்று....

No comments:
Post a Comment